தலைமன்னாரில் T56ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 67 தோட்டாக்கள் மீட்பு

நேற்று (01) திகதி தலைமன்னார் பொலிஸ் பிரிவில் பொலிஸ் விசேட பிரிவு (POLICE SPECIAL BRANCH) உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் தலைமன்னார் - மன்னார் பிரதான வீதியில் கட்டுகாரன் குடியிருப்பு பிரதேசத்தில் பொலிஸ் சீருடைகள் மற்றும் T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 67 தோட்டாக்களும் இதில் KPI (கஞ்சி பானி இம்ரான்) என்று அடையாளம் காணப்பட்ட 37 தோட்டாக்களும் தலைமன்னார் பொலிசாரினாள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.