மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

​கரடியனாறு கார்மலை பிரதேசத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த  பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை பகுதிக்கு இன்று காலை 11 மணியளவில் சென்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.