பெரிய கல்லாறில் புலனாய்வு துறையினர் சுற்றிவளைப்பு

​பெரிய கல்லாறு–2 பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் அனோஜன் என்பவரின் இல்லத்தில் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் திடீர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்திருந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் குறித்த வீட்டைச் சுற்றிவளைத்து சோதனை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனைக்கிடையில் சில புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சி தொடர்பான தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது.


இவரின் உறவினர் ஒருவர் மாவீரர் என்பதும் இவர் முன்னால் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சி எனக் கூறி பல இளைஞர்கள் மீது விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை, முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.