களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மீன் சந்தையிலிருந்து மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பழுதடைந்த மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (20.01.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பழுதடைந்த நிலையில் விற்பனைக்கு தயாராக இருந்த 16 கிலோகிராம் கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டன.
விசேட சுற்றிவளைப்பு
களுவாஞ்சிகுடி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இதன்போது வியாபாரிக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.