
மட்டக்களப்பில் மக்களை தேசிய தினத்திற்கு எதிராக போராட தூண்டி விட்டு, தங்களது சகாக்களை தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறு அனுமதி வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை செங்கலடி (Teeny Weeny Kids World) பாலர் பாடசாலையில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடிய செங்கலடி ஏறாவூர் பற்று தவிசாளர்.



இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து மட்டக்களப்பு நகரில் சுதந்திர தினத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்த போது,
தேசிய சுதந்திர தின விழாவில் அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார் ஏறாவூர் பற்று தவிசாளர் முரளிதரன் அவர்கள்.
கல்குடா பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் மற்றும் சிறிநேசனின் நேரடி ஆலோசனையின் கீழ் செயற்படும் தவிசாளர்களில் ஏறாவூர் பற்று தவிசாளரும் ஒருவர்.
ஒரு புறம் இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்குமாறும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர தின கரிநாள் போராட்டத்திற்கு தமிழ் மக்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் வைத்தியர் சிறிநாத் ஆகியோர் மறுபுறம் கட்சியின் தவிசாளர்களுக்கோ, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கோ போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.
ஆனால் மறுபுறம் தனது சகாக்களை சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு கூறியதற்கு அமைய ஏறாவூர் பற்று தவிசாளர், பாலர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளார்.
தமிழ் மக்களுக்கு ஒரு முகமும் அரசாங்கத்திற்கு இன்னுமொரு முகத்தை காட்டி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு கொண்டு. தமிழ் தேசியத்தின் போர்வைக்குள் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றும் இவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்