இலங்கையின் அழைப்பின் பேரிலேயே ஈரானியக் கப்பல்கள் வந்தன! 104 பேர் பலியானதாக ஈரான் தூதுவர் அதிரடித் தகவல்!

​ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அவர் முன்வைத்த முக்கிய கருத்துக்கள் வருமாறு:


அழைப்பு விடுத்தது யார்?: இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை கடற்படைத் தளபதியே, ஈரானியக் கப்பல்கள் இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.


அமைதி நோக்கம்: இந்தக் கப்பல்கள் எந்தவொரு போர் நடவடிக்கைக்காகவும் வரவில்லை. இந்தியாவில் நடைபெற்ற அமைதி ரீதியிலான கூட்டுப் பயிற்சியில் பங்கேற்ற பின்னரே இலங்கை வந்தன.


தாக்குதல் குறித்த குற்றச்சாட்டு

எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தூதுவர் குற்றம் சுமத்தினார்.


இந்தச் சம்பவத்தில் சுமார் 104 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.


மாலுமிகளின் தற்போதைய நிலை

தற்போது இலங்கையில் உள்ள 251 ஈரானிய மாலுமிகளை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்துச் செல்வது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.