திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் -அப்ரார்நகர் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று நேற்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ் மிதிவெடியில் ஜொனி என்றும் தமிழ் ஈழம் என்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செயலிழப்பு நடவடிக்கை
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இவ் மிதிவெடி புதைக்கப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
இவ் மிதிவெடியானது மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.