கொழும்பில் குண்டு வெடிப்புதிட்டம் முறியடிப்பு கஞ்சிப் பானை இம்ரனின் முக்கிய கூட்டாளி கைது

கொழும்பு நகரில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதச் சந்தேக நபர் ஒருவரைப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு (TID) அதிரடியாகக் கைது செய்துள்ளது.


வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவன் 'கஞ்சிப்பானி இம்ரான்' என்பவனின் நேரடி வழிநடத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் சதி தீட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


 இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கொழும்பின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்ய இந்தச் சந்தேக நபர் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.


நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையின் போது பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறியும் நோக்கில் கொழும்பு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.