புரட்சிப் பாடகர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!

​ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புரட்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமாகிவிட்டார்.


தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இன்று (28.04.2026) தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.


துயரங்களையும், விடுதலையின் அவசியத்தையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பாடி, கலை மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், இசை ஆர்வலர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

வழங்கப்பட்ட பட்டம் 


தமிழர் தாயகத்தின் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திய பாடல்களின் ஒரு தனித்துவ புரட்சி குரலாக இருந்த இவர் சி.பா. ஆதித்தனார் 1950களில் ஆரம்பித்த நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து, தமிழின எழுச்சி இசைப் பாடல்களை பாடிய செல்லப்பாவுக்கு அன்று ஆதித்தனார் தேனிசை செல்லப்பா என்ற அடையாளத்தை பட்டமாக வழங்கியிருந்தார்.


யாழ்ப்பாணம் முற்றவெளி மற்றும் மட்டக்களப்பு உட்பட்ட தமிழர் தாயகத்தின் பகுதிகளிலும் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலை இசை நிகழ்சிகளை அவர் நடத்தியபோது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.


இந்தநிலையில் தேனிசை செல்லப்பா இன்று தனது அகவை மூப்பால் காலமாகிய நிலையில் அவருக்கு தமிழ்தேசிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இவ்வுலகை விட்டுப் பிரிந்த தேனிசை செல்லப்பாவினுடைய உடல் வஞ்சுவாஞ்சேரி - படப்பையிலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.