யாழ்ப்பாணம் உரும்பிராயில் நேற்று (25.05.2026) நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது, பிரபல கலைஞர் S.G. சாந்தன் அவர்களின் இசைக்குழுவினர் தாயகப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
இதன் போது திடீரென புகுந்த பொலிஸார், பாடலை பாடுவதற்கு தடை விதித்து நிகழ்ச்சியை இடைநிறுத்தியுள்ளனர்.
கலைஞர்களின் சுதந்திரத்தையும், மக்களின் உணர்வுகளையும் மதியாது பொலிஸார் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.