பிறந்தநாள் வாழ்த்து – 71 ஆண்டுகள் தமிழ்தேசியப் போராட்டம்.

தமிழ்தேசிய அரசியல் போராளியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் இன்று (01.02.2026) தனது 71வது பிறந்த நாளை அடைகிறார்.


1955 பெப்ரவரி 01 அன்று கிழக்கிலங்கை மட்டக்களப்பு மாவட்டம், படுவான்கரைப் பெருநிலம் அம்பிளாந்துறையூரில் பிறந்த அவர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்தேசிய அரசியலில் தன்னை அர்ப்பணித்து வந்துள்ளார். சிறை, விசாரணை, தடுப்பு, அவதூறு, உயிர் அச்சுறுத்தல் போன்ற பல இன்னல்களை எதிர்கொண்டபோதும், தமிழ்தேசிய கொள்கையில் இருந்து ஒருபோதும் திசைமாறாமல் உறுதியுடன் பயணித்தவர்.


2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய அவர், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு 2,26,343 வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.


அரசியல் மட்டுமன்றி, ஊடகம், கலை, கவிதை, சமூக பணி ஆகிய துறைகளிலும் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் அவர், தன்மானம், நேர்மை, தூய்மை ஆகியவற்றை வாழ்வின் அடையாளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.


“தன்மானம் கொண்ட தமிழன் அவமானங்களால் வீழ்வதில்லை”

என்ற அவரது வார்த்தைகள், அவரது 71 ஆண்டுகால வாழ்வின் சாரமாகவே பார்க்கப்படுகிறது.


தமிழ்தேசிய கொள்கையில் தளராத உறுதி!


ஈழமண் விடுதலை வரை தொடரும் பயணம்!


பா. அரியநேத்திரன் அவர்களின் 71வது பிறந்த நாளுக்கு

மரியாதைமிக்க, புரட்சிகரமான வாழ்த்துகள்!