திருகோணமலை கடலில் நீந்திய ஏழுபேரை அடித்துச் சென்றது அலை

திருகோணமலை நிலாவெளி பொது கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த ஏழு பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.


திருகோணமலை அலஸ்வத்த காவல்துறை உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படை கடலோர காவல்படை அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு அவர்களை பாதுகாப்பாக மீட்டு அடிப்படை சிகிச்சை அளித்தனர்.


சுற்றுலாவிற்கு வந்தபோது அனர்த்தம்


கேகாலையில் இருந்து 30 பேருடன் சுற்றுலாவிற்கு வந்த அவர்கள், சுற்றுலா முடித்துவிட்டு கடலில் நீந்தி மகிழ்ந்தபோது, ​​அலையில் சிக்கினர்.

ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு பேர் 1990 அம்புலன்ஸ் உதவியுடன் நிலாவெளி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.